உடல் நலக்குறைவு யாருக்கும் எப்போதும் வரலாம்: வைரமுத்து

எச்.ராஜா அவர்கள் உடல்நலக் குறைவு கண்டிருப்பது உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு யாருக்கும் எப்போதும் வரலாம்: வைரமுத்து
Published on

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உடல் நலக் குறைவு என்பது

உலக நியதி

யாருக்கும் எப்போதும்

எதுவும் நேரலாம்

அது

எள்ளி நகையாடும்

பொருளன்று

பரிவு காட்டுவது

பண்பாடு;

நலம்பெற வாழ்த்துவது

நாகரிகம்

பா.ஜ.க

தலைவர்களுள் ஒருவரான

எச்.ராஜா அவர்கள்

உடல்நலக் குறைவு

கண்டிருப்பது

உள்ளத்திற்கு அதிர்ச்சி தருகிறது

அவர்

விரைவில் நலமுறவும்

விரும்பிய பணிகளை

ஆற்றி வரவும்

வாழ்த்துகிறேன்

தமிழ்நாட்டின்

கதகதப்பான அரசியலுக்கு

அவரும் ஒரு காரணம் என்பதை

மறுக்க முடியாது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com