

உடல் வலிமைக்காக உலகப் புகழ் பெற்ற அர்னால்டு ஸ்வார்சினேகர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். அர்னால்டின் இதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லக் கூடிய வால்வு ஒன்றை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் மாற்றியிருந்தனர். அதை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக தற்போது லாஸ் ஏஞ்செல்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து அர்னால்டின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிகிச்சை முடிந்து அர்னால்டு நலமாக இருக்கிறார். கண் விழித்தவுடன் டெர்மினேட்டர் படத்தின் வசனமான ஐ எம் பேக் என்று தான் கூறினார். மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என தெரிவித்துள்ளார். அர்னால்டு கலிபோர்னியாவில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.