படித்துக் கொண்டே அதையும் செய்து வருகிறேன் - இவானா

நடிகை இவானா தெலுங்கு மொழியில் 'சிங்கிள்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படித்துக் கொண்டே அதையும் செய்து வருகிறேன் - இவானா
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவானா. இவர் 'லவ் டுடே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'நாச்சியார், கள்வன், மதிமாறன்' என்ற படத்தில் நடித்தார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது, "சிங்கிள்" என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தின் மூலம் தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு கதாயநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகை இவானா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய இவானா, "தற்போது நான் பி.ஜி படித்துக் கொண்டு இருக்கிறேன். நான் படித்துக் கொண்டே சினிமாவில் நடித்தும் வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. தற்போது நடிக்கும் 'சிங்கிள்' படத்திற்காக தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டுவருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com