'கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்' - கேத்ரின் தெரசா

சமீபத்தில் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவான 'கேங்கர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கேத்ரின் நடித்திருந்தார்.
I'm grossly underutilised as an actor: Catherine Tresa
Published on

சென்னை,

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா. இவர் தமிழ் சினிமாவில் 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, "கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் உருவான 'கேங்கர்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் 'குப்பன்' என்ற பாடலுக்கு கிளாமராக நடனமாடி இருந்தார்.

இந்நிலையில், கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில் தான் சிக்கிக் கொண்டிருப்பதாக கேத்தரின் தெரசா கூறியுள்ளார். அவர் கூறுகையில், "படங்களில் ஒரு நடிகையாக நான் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

பல்வேறு மொழிகளில், கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த பிம்பத்தை மறைக்க எனக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட மற்ற கதாபாத்திரங்களில் அதிகமான பங்களிப்பை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com