என்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சி இல்லை - ஸ்ரீலீலா


என்னை டான்சர் என்று அழைப்பதில் மகிழ்ச்சி இல்லை - ஸ்ரீலீலா
x
தினத்தந்தி 14 March 2025 2:14 AM IST (Updated: 28 March 2025 8:43 AM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தன்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சியில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் நடன கலைஞராக இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா. அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்சிக்' பாடலில் நடனமாடி கவனத்தை பெற்றார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் பராசத்தி படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் ராபின்ஹுட் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் ஆர்யனுடன் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமான இவர், தற்போது ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, என்னை 'டான்சர்' என்று அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சியில்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு நல்ல நடனக் கலைஞர் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு, ஒரு நடிகையாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story