’அதைத்தான் எனது முதல் படமாக எடுக்க நினைத்தேன்’ - ஏ.ஆர்.முருகதாஸ்


Im planning to do my Next Film featuring Monkey in the lead- ARMurugadoss
x

தான் இயக்க உள்ள அடுத்த படத்தை பற்றி ஏ.ஆர் முருகதாஸ் ஒரு நேர்காணலில் பேசினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். 'தீனா' படத்தின் மூலம் இயக்குனரான அறிமுகமான முருகதாஸ் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் நல்ல வர்வேற்பை பெற்றது.

இந்நிலையில், தான் இயக்க உள்ள அடுத்த படத்தை பற்றி ஏ.ஆர் முருகதாஸ் ஒரு நேர்காணலில் பேசினார். அவர் அதில்,

’எனது அடுத்த படத்தில் ஒரு குரங்கை ஹீரோவாக நடிக்க வைத்து (கிராபிக்ஸ் திரைப்படம்) உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே எனக்கு இந்த யோசனை இருந்தது. இதைத்தான் எனது முதல் படமாக எடுக்க நினைத்திருந்தேன். குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்க உள்ளேன்’ என்றார்.


1 More update

Next Story