

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் 'காக்டெயில்-2' படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள் குறித்து வெளியாகும் கிசுகிசு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு ராஷ்மிகா, "எதையும் பேசவே தற்போது பயமாக இருக்கிறது. எதை சொன்னாலும் அது வேறு மாதிரியாக போய்விடுகிறது. பேசாத விஷயங்களையும் பேசியதாக பரப்பி விடுகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் நம்மை பற்றி என்ன செய்தி வெளியாகுமோ..? என்ற பீதியில் இருக்க வேண்டியிருக்கிறது.
சமூக வலைதளங்களின் வளர்ச்சி நல்லதுதான். ஆனால் அதை தவறான கண்ணோட்டத்தில் சிலர் பயன்படுத்துவதுதான் வேதனை" என்று பதிலளித்தார்.