'என் நடிப்பு திறமையை நிரூபித்து சோர்வடைந்துவிட்டேன்..?' - இந்தி இயக்குனர்கள் குறித்து மிருணாள் தாக்கூர் பேச்சு

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘பேமிலி ஸ்டார்’ படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்து வருகிறார்.
Image Credits: Instagram.com/mrunalthakur
Image Credits: Instagram.com/mrunalthakur
Published on

சென்னை,

சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஹாய் நான்னா' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிருணாள் தாக்கூர் இந்தி இயக்குனர்களிடம் தனது நடிப்பு திறமையை நிரூபிக்க முயற்சி செய்து சோர்வடைந்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதாவது:-

"நான் நடித்த சீதாராமம், ஹாய் நான்னா போன்ற காதல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. என்னை ரசிகர்கள் 'ரொமான்ஸ் குயின்' என அழைப்பதால் சந்தோஷம் அடைகிறேன். இந்தியில் காதல் படங்களில் நடிக்க ஆசை.

ஆனால் அதுபோன்ற கதைகள் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை நான் அவ்வளவு பிரபலம் அடையவில்லையா என தெரியவில்லை. இதற்குமேல் என் நடிப்பு திறமையை இந்தி இயக்குனர்களிடம் எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லை. நான் அதை நிருபிக்க முயற்சி செய்து சோர்வடைந்துவிட்டேன்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com