2-வது திருமணத்தால் இமான் நெகிழ்ச்சி

கடந்த வாரம் அமலி என்பவரை இமான் 2-வது திருமணம் செய்து கொண்டார். மறுமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் இமான் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
2-வது திருமணத்தால் இமான் நெகிழ்ச்சி
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் 2008-ல் மோனிகா ரிச்சர்ட்டை திருமணம் செய்து சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் அமலி என்பவரை இமான் 2-வது திருமணம் செய்து கொண்டார். மறுமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் இமான் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், "மறைந்த கலை இயக்குனர் உபால்டின் மகளான அமலியை மறுமணம் செய்துள்ளேன். பெரியவர்கள் நிச்சயித்த இந்த திருமணம் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட எனது குடும்பத்தினருக்கு ஆறுதலை தரும். அமலியின் மகளான நேத்ரா இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

திருமணத்தில் எனது மகள்கள் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. அவர்கள் என்னிடம் விரைவில் வருவார்கள் என்று பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் நேத்ரா, எங்கள் உறவினர்கள் அனைவரும் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com