`தி லயன் கிங்' தொடரில் நடித்த இமானி ஸ்மித் கொடூரமாக கொலை


`தி லயன் கிங் தொடரில் நடித்த இமானி ஸ்மித் கொடூரமாக கொலை
x
தினத்தந்தி 26 Dec 2025 12:11 PM IST (Updated: 26 Dec 2025 1:53 PM IST)
t-max-icont-min-icon

பிரபலமான நடிகை இமானி ஸ்மித் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தி லயன் கிங்’ கார்ட்டூன் படத்தில் இளம் ‘நாலா’ கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்த பிரபலமான நடிகை இமானி ஸ்மித் (25) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்த இமானி ஸ்மித், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இமானி ஸ்மித்தின் ஆண் நண்பர் ஜோர்டன் டி. ஜேக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story