ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் நடிப்பில் ‘இம்மோர்டல்’... டிரெய்லர் வெளியானது

‘இம்மோர்டல்’ படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
இம்மோர்டல்
Published on

சென்னை,

ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பில் மட்டுமின்றி, நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ‘இம்மோர்டல்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கயாடு லோஹர்

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 4-ம் தேதி ரிலீஸ்

முன்னதாக, இத்திரைப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் முதல்-அமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், ‘இம்மோர்டல்’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com