சிறையில் அடைபட்டு தவிப்பு - பயங்கர குற்றவாளிகள் நடுவில் ஆர்யன்கான்

போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள ஷாருக்கானின் மகனும், இளம் நடிகருமான ஆர்யன்கானை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அடைபட்டு தவிப்பு - பயங்கர குற்றவாளிகள் நடுவில் ஆர்யன்கான்
Published on

போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள ஷாருக்கானின் மகனும், இளம் நடிகருமான ஆர்யன்கானை மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைத்துள்ளனர். அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவர ஷாருக்கான் கடும் முயற்சிகள் எடுத்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் ஷாருக்கான் மிகுந்த வேதனையில் இருக்கிறார். ஜாமீன் மனு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது. ஜெயிலில் மற்ற கைதிகளை போலவே ஆர்யன்கான் நடத்தப்படுகிறார். வீட்டு உணவுக்கு அனுமதி இல்லை. ஆர்தர்ரோடு சிறையில் தற்போது 3,200 கைதிகள் உள்ளனர். அவர்களில் பலர் கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குரூர குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அந்த பயங்கர குற்றவாளிகள் நடுவேதான் ஆர்யன்கான் ஒவ்வொரு நாளையும் தவிப்போடு கழித்து வருகிறார். மற்ற கைதிகள் போலவே காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சிறை உணவுகள் ஆர்யன்கானுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் சிறை கேண்டீனில் சாப்பிட ஷாருக்கான் ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com