திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் பிரதீப் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.

நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரதீப் என்பவர் ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரபல டிவி-யின் சுமங்கலி என்னும் புதிய தொடரில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர், பிரதீப். பாசமலர் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை பாவனியுடன் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

இன்று அதிகாலை 4 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பிரதீப் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளே என்று சொல்லப்பட்டாலும், சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் முயன்றுவருகின்றனர்.

பிரதீப்பின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com