வாழ்க்கை கதைகளில் டாப்சி, ஜான்வி கபூர்

வாழ்க்கை கதைகளில் நடிகை டாப்சி மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
வாழ்க்கை கதைகளில் டாப்சி, ஜான்வி கபூர்
Published on


வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தயாராகும் ராஷ்மி ராக்கெட் படத்தில் டாப்சியும் தி கார்கில் கேள் என்ற படத்தில் ஜான்வி கபூரும் நடித்து வருகின்றனர். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதனை படைத்த வீராங்கனையை பற்றிய கதையே ராஷ்மி ராக்கெட்.

இந்த படத்துக்கான கதையை நந்தா பெரியசாமி எழுதி உள்ளார். ஆதார்ஷ் குரானா இயக்கி உள்ளார். இதில் டாப்சி நடிக்கும் தோற்றம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு தனது தோற்றத்தை முழுவதுமாக டாப்சி மாற்றி இருக்கிறார். தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

கார்கில் போரில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய வீரர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் பெண் ராணுவ பைலட் குஞ்சன் சாக்சேனா. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தி கார்கில் கேள் படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கிறார்.

குஞ்சன் சாக்சேனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜான்வி கபூரின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இந்த படத்துக்காக ஜான்வி கபூர் தீவிர உடற்பயிற்சிகள் செய்து 6 கிலோ எடை குறைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com