புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு

சிம்பு நடிப்பில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் கடந்த பிப்ரவரியில் வந்தது. இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு
Published on

ஓவியாவின் 90 எம்.எல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். ஹன்சிகாவின் மகா படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்தியுடன் அதிரடி படமொன்றில் நடிக்கிறார்.

மாநாடு படத்தில் கதாநாயகனாக நடிக்க சிம்புவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். படப்பிடிப்பில் பங்கேற்க தாமதம் செய்வதாக அவரை திடீரென்று நீக்கி விட்டனர். அதற்கு போட்டியாக மகா மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்திலும் சிம்பு மீது புகார் அளித்துள்ளனர்.

கன்னட படமான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதற்காக தனது தோற்றத்தை மாற்ற வெளிநாடு சென்று இருந்தார். அங்கு 2 மாதங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுகோப்பாக மாற்றி இருக்கிறார். தலைமுடியையும் மாற்றி அமைத்துள்ளார். தாடி வளர்த்துள்ளார்.

புதிய தோற்றத்தில் சென்னை திரும்பிய அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச சிம்பு திட்டமிட்டு உள்ளார். ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யவும், சமூக பணிகளில் அவர்களை தீவிரமாக இறக்கி விடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com