“ரெட் ஜெயன்ட்” நிறுவன பொறுப்பை கையிலெடுத்த இன்பன் உதயநிதி - தனுஷ் வாழ்த்து


“ரெட் ஜெயன்ட்” நிறுவன பொறுப்பை கையிலெடுத்த இன்பன் உதயநிதி - தனுஷ் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Sept 2025 3:23 PM IST (Updated: 5 Sept 2025 3:28 PM IST)
t-max-icont-min-icon

‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன்.

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முழுவதும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இன்பன் உதயநிதியின் புதிய பயணத்துக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து தற்போது அந்த பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி கையிலெடுத்திருக்கிறார். இதையடுத்து இன்பன் உதயநிதியை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.


1 More update

Next Story