கூட்ட நெரிசலில் அநாகரீகம்.. நடிகை ஹனி ரோஸிடம் எல்லை மீறிய ரசிகர்கள்

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கூட்ட நெரிசலில் அநாகரீகம்.. நடிகை ஹனி ரோஸிடம் எல்லை மீறிய ரசிகர்கள்
Published on

கோழிக்கோடு,

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். இவர் தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ளார். பல்வேறு கடை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் ஹனி ரோஸ் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஹனீ ரோஸ் கலந்து கொண்டார். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தனர். அதனால் அங்கு பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகையுடன் செல்பி எடுக்கும்போது ஒரு சிலர் அவரிடம் அநாகரீகமாக நடந்துள்ளனர். அதிலும் ஒருவர் நடிகையின் இடுப்பில் கையை வைத்துள்ளார். அது ஒரு பொது இடம் என்பதாலும், அவர் கூட்டத்தின் நடுவில் இருந்ததாலும், அவர் தனது நிதானத்தைக் கடைப்பிடித்து, எந்தவித ஆத்திரத்தையும் காட்டாமல் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பொது நிகழ்ச்சிகளில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காண வரும் ரசிகர்கள், செல்பி எடுக்கும் ஆர்வத்தில் எல்லையை மீறி அவர்களைத் தொடுவதும், அநாகரீகமாக நடந்துகொள்வதும் தொடர்கதையாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com