உலக அரங்கில் இந்திய சினிமா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது - நடிகர் யாஷ்

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் 'டாக்ஸிக்' படத்தில் நடித்துள்ளார்.
உலக அரங்கில் இந்திய சினிமா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது - நடிகர் யாஷ்
Published on

'கே.ஜி.எப்' மூலமாக இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த யாஷ், தற்போது கீது மோகன் தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' படத்தில் நடித்துள்ளார். இதில் அவருடன் நயன்தாரா, ருக்மினி வசந்த், கியாரா அத்வானி, ஹீமா குரேஷி. தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சினிமா விழாவில் யாஷ் பேசுகையில், “இந்திய சினிமாவில் முதன்முறையாக ஆங்கிலத்திலும் 'டாக்ஸிக்' படத்தை எடுத்திருக்கிறோம். இது சாதாரண கேங்ஸ்டர் படம் அல்ல. இதில் நிறைய புதிய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

உலகரங்கில் இந்திய சினிமா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது. சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும், கலாசாரமும் மாறிவிடும். ஆனால் டப்பிங் மற்றும் பான் இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com