

தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவரான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எப்படியோ ஒரு நடிகரை இந்த சினிமா, வர்த்தக சினிமாவில் இருந்து விடுவித்து, மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்து இருக்கிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள், இதுபோன்ற சமூகத்துக்கான படங்கள் செய்தால், சென்றடையும் வீச்சை... வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது.
இவ்வாறு சேரன் கூறியிருக்கிறார்.