ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு


Indians inducted into Oscars Academy: Kamal Haasan, Payal Kapadia, Ayushmann Khurrana among 534 global invitees
x
தினத்தந்தி 27 Jun 2025 10:15 AM IST (Updated: 28 Jun 2025 8:11 AM IST)
t-max-icont-min-icon

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து, நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா தவிர, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story