இந்திரன்ஸ், மதுபாலா நடித்துள்ள “சின்ன சின்ன ஆசை” பட டிரெய்லர் வெளியானது

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா நடித்த ‘சின்ன சின்ன ஆசை’ படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்திரன்ஸ், மதுபாலா நடித்துள்ள “சின்ன சின்ன ஆசை” பட டிரெய்லர் வெளியானது
Published on

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ், மதுபாலா இணைந்து நடித்த திரைப்படம் ‘சின்னச் சின்ன ஆசை’. இப்படம் காசியில் தொலைந்த மதுபாலாவுக்கும் அவருக்கு உதவி செய்யும் இந்திரன்ஸுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், உறவுகள் குறித்த மேன்மை ஆகியவற்றைக் கொண்டு உணர்வுப்பூர்வமான படமாக உருவாகியுள்ளது.

‘சின்னச் சின்ன ஆசை’ படத்தில் நடிகர்கள் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமைய்யா, ஜாபர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘சின்னச் சின்ன ஆசை’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com