தனுஷின் 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் 'குபேரா' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.
தனுஷின் 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதைத்தொடர்ந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com