“பராசக்தி” படத்தின் வில்லன் தேர்வு குறித்து இயக்குநர் பகிர்ந்த தகவல்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
“பராசக்தி” படத்தின் வில்லன் தேர்வு குறித்து இயக்குநர் பகிர்ந்த தகவல்
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பராசக்தி படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. முதல் பாடலான அடி அலையே, 2வது பாடலான ரத்னமாலா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் சகோதரர்களாக நடித்துள்ளதாக இயக்குநர் சுதா கொங்காரா தெரிவித்துள்ளார். மேலும், பராசக்தியில் வில்லனாக நடிக்க முதலில் இந்தி நடிகரைத் தேர்வு செய்யும் திட்டத்தில் இருந்ததாகவும் ஆனால் தயாரிப்பாளர் நடிகர் ரவி மோகனிடம் கதாபாத்திரத்தை குறித்து சொன்னபோது அவரே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் சுதா கொங்காரா கூறியுள்ளார். முக்கியமாக, நான் என்ன கேட்டேனோ அதை மறுப்பின்றி ரவி செய்துகொடுத்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com