வலைத்தளத்தில் பரவும் தகவல்: புதிய படத்தில் ரஜினிக்கு 2 மனைவிகள்?

ரஜினிகாந்த் தர்பார் படத்தை முடித்து விட்டு சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
வலைத்தளத்தில் பரவும் தகவல்: புதிய படத்தில் ரஜினிக்கு 2 மனைவிகள்?
Published on

முதல் கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இது ரஜினிக்கு 168-வது படம்.

கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீனாவும், குஷ்புவும் நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து பிரபலமாகி தற்போது ரஜினி படத்தில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார். நகைச்சுவை வேடத்தில் சூரி வருகிறார்.

தர்பார் படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்துள்ள ரஜினி புதிய படத்தில் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்று அறிவதில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் உள்ளது.

இந்த நிலையில் புதிய படத்தில் ரஜினி 2 பெண்டாட்டிக்காரர் வேடத்தில் நடிப்பதாகவும் அவரது மனைவிகளாக குஷ்பு, மீனா நடிப்பதாகவும் இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 25 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த வீரா படத்தில் 2 பெண்டாட்டிக்காரராக நடித்து இருந்தார். மனைவிகளாக மீனா, ரோஜா நடித்து இருந்தனர்.

ஆனாலும் இதனை படக் குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com