'நான் தான் கிங்கு' படத்தின் கேரக்டர் கிளிக்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சந்தானம் நடித்த 'நான் தான் கிங்கு' படத்தின் கேரக்டர் ரிவீலிங் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'நான் தான் கிங்கு' படத்தின் கேரக்டர் கிளிக்ஸ் வீடியோ வெளியீடு
Published on

நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகனாக மாறியவர்களில் சந்தானம் ஒருவர். 2014-ம் ஆண்டு ஸ்ரீனாத் இயக்கத்தில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 

சில மாதங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல நகைச்சுவை திரைப்படமாக சந்தானத்திற்கு அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. 

ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன் உட்பட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்படம் மே 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து கேரக்டர் ரிவீலிங் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பால சரவணன் பாலா என்ற கதாப்பாத்திரத்திலும், தம்பி ராமையா விஜயகுமார் ஜமீனாகவும், முனிஸ்காந்த பாடி பல்ராமாகவும் சந்தானம் வெற்றிவேல் கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். சந்தானம் மணமேடையில் அழுதுக்கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com