யோகிபாபு ஜோடியாக இனியா

யோகிபாபு ஜோடியாக இனியா
Published on

`தூக்குதுரை' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் யோகிபாபு, இனியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்டு செய்துள்ளார்.

படம் குறித்து அவர் கூறும்போது, ''18-ம் நூற்றாண்டு மற்றும் 1990, 2023 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. ஒரு மன்னர் பரம்பரை, மரியாதை, திருவிழா, கிரீடம் உள்ளிட்ட சில விஷயங்கள் திரைக்கதையை சுற்றி வரும்.

திருவிழாவில் சினிமா போடுபவராக யோகிபாபு வருகிறார். கிராமத்து பெண்ணாக வரும் இனியா இரண்டு வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கிறார். கதையைக் கேட்டதும் யோகிபாபு ஜோடியாக நடிக்க இனியா ஒப்புக்கொண்டார்.

மாரிமுத்து, பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் உள்ளனர். அந்த கால காஞ்சீபுரம், தற்போதைய திருப்பத்தூரில் கதை நடக்கும். குகை சம்பந்தமான காட்சிகளை அரங்கு அமைத்து எடுத்தோம். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com