கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குனர் யார் தெரியுமா?


கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குனர் யார் தெரியுமா?
x
தினத்தந்தி 9 Oct 2025 9:41 AM IST (Updated: 9 Oct 2025 12:15 PM IST)
t-max-icont-min-icon

இன்பநிதி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகரும், துணை முதல்வருமான உதயநிதியின் மகன் இன்பநிதி, திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தனுஷின் "இட்லி கடை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக அறிமுகமானார். மேலும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கிடையில், இன்பநிதி கூத்துப்பட்டறை ஒன்றில் நடிப்பு கற்றுக்கொள்ள சென்ற காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், இன்பநிதி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படத்தினை பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளியான "மாமன்னன்" படத்தினை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story