புதிய வீட்டில் குடியேறிய தனுஷ்

சென்னை போயஸ்கார்டன் பகுதியில் புதிய வீடு கட்டி தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.
புதிய வீட்டில் குடியேறிய தனுஷ்
Published on

 நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி குடியேறி இருக்கிறார். அந்த வீட்டில் சிவராத்திரியன்று நெருங்கிய உறவினர்கள, நண்பர்களை அழைத்து பூஜை செய்துள்ளார். இதில் டைரக்டர் சுப்பிரமணியம் சிவாவும் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகிறது. புதிய வீட்டில் தனுஷ் தனது தாய், தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை டைரக்டர் சுப்பிரமணியம் சிவா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தம்பி தனுசின் புதிய வீடு. கோவில் உணர்வு எனக்கு. வாழும்போதே தாய் தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள் தெய்வீகமாக உணரப்படுகிறார்கள். மேலும் தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகவும், உதாரணமாகவும் உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும், சாதனைகளும் உன்னை துரத்தட்டும். உன்னை பார்த்து ஏங்கட்டும். உன்னை கண்டு வியக்கட்டும். வாழ்க தம்பி வாழ்வாங்கு வாழ்க'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பதிவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் ஆகிய படங்களை சுப்பிர மணியம் சிவா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com