அஜித் அண்ணாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்- நடிகர் மஹத்


அஜித் அண்ணாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்- நடிகர் மஹத்
x

நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனை மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார் என்று நடிகர் மஹத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்பர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார். இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம்.

இந்த அனுபவத்தை "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது பிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது" என்று நடிகர் மஹத் கூறினார். மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, "கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது" என்றார்.

இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் மஹத் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதையும் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். "நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்" என்றார்.

1 More update

Next Story