விஜய்சேதுபதி - சம்யுக்தா மேனன் திரைப்படம்...வெளியான சுவாரசியமான அப்டேட்

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை,
பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீபத்திய தகவலின்படி, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்போதைக்கு, கிறிஸ்துமஸ் சீசனில் வெளியாக பெரிய படங்கள் எதுவும் இல்லை என்பதால் கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Related Tags :
Next Story






