தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு சர்வதேச விருது!

தேவயானி எழுதி இயக்கிய 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு சர்வதேச விருது!
Published on

சென்னை,

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை தேவயானி. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் முதன்முறையாக 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை பேசுகிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 20 நிமிடம் கொண்ட இந்த குறும்படம் 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

இது பற்றி தேவயானி கூறுகையில் எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும் முதல் முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்காற்றிய மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவை போல மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com