ஜிம்மிற்கு சென்ற சமந்தாவை கடுப்பாக்கிய ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ


ஜிம்மிற்கு சென்ற சமந்தாவை கடுப்பாக்கிய ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
x

சமந்தா ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவரை படம் எடுக்க முயன்றனர்.

மும்பை,

நடிகை சமந்தா மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு திரும்பியபோது ஒரு சிறிய சம்பவம் நடைபெற்றது.

சமந்தா ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவரை படம் எடுக்க முயன்றனர். அந்த நேரத்தில் கைபேசியில் பேசிக்கொண்டிருந்த சமந்தா, தன்னுடைய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இல்லாததை கவனித்து மீண்டும் ஜிம்முக்குள் திரும்பிச் சென்றார்.

பின்னர் மீண்டும் வெளியே வந்தபோது, தொடர்ந்து படம் எடுக்க முயற்சி செய்ததை கவனித்த சமந்தா கடுப்பாகி அதை நிறுத்துங்கள் என்று கூறி விட்டு காரில் ஏறி சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story