குமரன் நடிக்கும் “இறுதிபக்கம் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் ‘இறுதிபக்கம் 2’ படத்தின் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குமரன் நடிக்கும் “இறுதிபக்கம் 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on: 

குமரன் தங்கராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான ‘இறுதிபக்கம்’ படத்தின் அடுத்த படைப்பாக ‘இறுதிப்பக்கம் 2’ உருவாகியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.

பதற்றத்தைக் கூட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில், ‘இறுதிபக்கம் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், போர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும் நீல நிற கார் என மர்மத்தையும் பதற்றத்தையும் ஒரே பார்வையில் கடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்ணைச் சுற்றி பரவியிருக்கும் ரத்தம் காரின் பாதையாக நீளும் காட்சி, இந்தக் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கதையின் விசாரணைத் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

‘இறுதிபக்கம் வால்யூம் 02 பிரஸ் பிளட்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் லுக், படம் ஒரு புதிய ரத்தம் தோய்ந்த மர்மம் மற்றும் பரபரப்பான திரில்லர் களத்தை கையில் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com