'இறுதி முயற்சி' படத்தின் டீசர் வெளியீடு
'இறுதி முயற்சி' படத்தின் டீசரை இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.
'இறுதி முயற்சி' திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது..
ரஞ்சித் மெகாலி மீனாட்சி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டீசரை இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.