'ஜெயிலர் 2' ரிலீஸ் அப்டேட் வருகிறதா?... சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

இன்று மாலை 6.00 மணிக்கு 'ஜெயிலர் 2' தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஜெயிலர் 2' ரிலீஸ் அப்டேட் வருகிறதா?... சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
Published on

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இன்று மாலை வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு, படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பானதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் 'ஜெயிலர் 2'

2023-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு

'ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில், இன்று மாலை 6.00 மணிக்கு 'ஜெயிலர் 2' தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு படத்தின் ரிலீஸ் தேதி, டீசர், அல்லது முக்கிய புரமோஷன் அப்டேட் தொடர்பானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும், அறிவிப்பின் விவரம் மாலை வெளியாகும் வரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com