'இந்தியன் 2' படத்தில் மனிஷா கொய்ராலாவா? - புகைப்படம் வைரல்

'இந்தியன் 2' படத்தில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவுகிறது.
image courtecy:instagram@m_koirala
image courtecy:instagram@m_koirala
Published on

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

சமீபத்தில், 'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை மனிஷா கொய்ராலா சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் சங்கரை மனிஷா கொய்ராலா மும்பையில் சந்தித்துள்ளார். இது குறித்தான புகைப்படத்தை அவர் இணையதளத்தில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படம் வைரலாக பரவியது.

இதனால் அவர் 'இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவுகிறது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com