அரசியலுக்கு வருகிறாரா அஜித்...? பிரேமம் பட இயக்குனரின் சர்ச்சை பதிவு வைரல்...!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
அரசியலுக்கு வருகிறாரா அஜித்...? பிரேமம் பட இயக்குனரின் சர்ச்சை பதிவு வைரல்...!
Published on

சென்னை,

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான 'பிரேமம்' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அல்போன்ஸ் புத்திரன்தான் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்து இருந்தனர்.

சமீபத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது, இதனால் சினிமாவில் இருந்து விலகுகிறேன்' என்று பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவை சிறிது நேரத்திலேயே நீக்கினார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்ட தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பதிவில், ''நான் அஜித்குமாரிடம் சொல்ல விரும்புவது. நிவின் பாலி, சுரேஷ் சந்திரா ஆகியோர் மூலமாக நீங்கள் அரசியலுக்கு வர இருப்பதாக கேள்விப்பட்டேன். உங்கள் மகள் அனோஷ்காவின் விருப்பத்தின் பேரில் 'பிரேமம்' படத்தில் நடித்த நிவின் பாலியை உங்கள் வீட்டுக்கு அழைத்து பேசிய பிறகு இதை நான் அறிந்தேன்.

ஆனால், இதுவரை எந்த அரசியல் கட்சிகளிலும் உங்களை பார்க்கவில்லை. அப்படியென்றால் என்னிடம் சொல்லப்பட்டது பொய்யா? அல்லது நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? இல்லை யாரேனும் உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா? இந்த மூன்றும் இல்லை என்றால் என்ன காரணம் என்பதை கடிதம் மூலம் பொது வெளியில் நீங்கள் விளக்க வேண்டும். உங்களை நான் நம்புகிறேன். மக்களும் நம்புகிறார்கள்' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com