அடுத்த படத்தில் கடவுள் முருகனாக நடிக்கப் போகிறாரா அல்லு அர்ஜுன் ?


Is Allu Arjun going to play Kartikeya in Trivikram’s next?
x
தினத்தந்தி 29 Jan 2025 7:22 AM IST (Updated: 29 Jan 2025 7:36 AM IST)
t-max-icont-min-icon

கடவுள் கார்த்திகேயனின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை திரிவிக்ரம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் கடந்த மாதம் 5-ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இப்படத்தையடுத்து அல்லு அர்ஜுன், திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் தயாரிப்பாளர் நாக வம்சி இதனை உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது

அதன்படி, முருகன் அல்லது ஸ்கந்தா என அழைக்கப்படும் கடவுள் கார்த்திகேயனின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை திரிவிக்ரம் இயக்க இருப்பதாகவும், இதில் கார்த்திகேயாவாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story