தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?

மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
Published on

சென்னை,

தனுஷ் நடிப்பில் டைரக்டர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் பத்திரிக்கையாளர்கள் வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் மாறன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

இது தனுஷின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மாறனின் ஓடிடி வெளியீடு குறித்து நடிகர் தனுஷின் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com