

சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி, யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் வேடன். இவர் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இதன் மூலம் பிரபலமான இவர், தற்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' படத்திலும் பாடியிருந்தார். மேலும், பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல ராப் பாடகர் வேடனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை பிப்ரவரி 24 அன்று திருச்சூரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.