கணவரை பிரிகிறாரா ஹன்சிகா? திருமணம் ஆகி இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனக்கசப்பு


கணவரை பிரிகிறாரா ஹன்சிகா?  திருமணம் ஆகி  இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனக்கசப்பு
x
தினத்தந்தி 20 July 2025 9:13 PM IST (Updated: 21 July 2025 2:18 PM IST)
t-max-icont-min-icon

சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

'சின்ன குஷ்பு', 'அமுல்பேபி' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்தார். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீய வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி,

கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை ஹன்சிகா காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.

ஹன்சிகா-சோஹைல் கட்டாரியா தம்பதியரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சிதான் வந்து சேர்ந்திருக்கிறது.

அதாவது, ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டாராம். கடந்த மாதமே அவர், கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது மும்பையில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறாராம். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். ஹன்சிகா இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின் ஹன்சிகாவும், சோஹேலும் கூட்டு குடும்பமாக இருக்க முடிவு செய்து உள்ளனர். ஆனால், ஹன்சிகாவிற்கு தனது கணவரின் குடும்ப சூழலுக்கு ஏற்றபடி இருக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டை அவ்வப்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை புரிந்து கொண்ட சோஹேலின் பெற்றோர். அதே வீட்டில் மேல் மாடி அறைக்கு சென்றுள்ளனர். இருந்த போதும், ஹன்சிகாவிற்கும் சோஹேலுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மாறாததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story