அல்லு அர்ஜுனின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் இவரா?.. ரசிகர்கள் உற்சாகம்

பிரமாண்டமாக தயாராகி வரும் ராக்கா படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் இவரா?.. ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 'ராக்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 'ராக்கா' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் வரப்போவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே 'ஜெயிலர்-2' படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் தன்னுடைய 'கிங் படத்துக்கான தோற்றத்தை மாற்ற முடியாது என்பதால், 'ஜெயிலர்-2' படத்தில் இருந்து அவர் வெளியேறியதாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com