மாரி செல்வராஜின் "வாழை 2" படத்திற்கு இசையமைக்கிறாரா இளையராஜா?

'வாழை 2' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜின் "வாழை 2" படத்திற்கு இசையமைக்கிறாரா இளையராஜா?
Published on

சென்னை,

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'வாழை'. இந்தப் படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பைசன்' திரைப்படமும் வெற்றியடைந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் புதிய படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தை முடித்த பின்னர் 'வாழை 2' படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கதிர் மற்றும் காயடு லோகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'வாழை 2' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com