இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா?

இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா?
Published on


கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படம் வசூல் குவித்தது. அதன் 2-ம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் தயாரிக்க ஏற்பாடுகள் நடந்தன. கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வானார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டதாக கூறப்பட்டது. அவரது தோற்றத்தை ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அதன்பிறகு படத்தின் பட்ஜெட் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தை கைவிட்டுவிட்டதாக தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து பட தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது அது வதந்திதான் என்று மறுத்தனர். படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறினர். தேர்தல் முடிவுகள் வெளியானதும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது திரையுலக பயணத்தில் இந்தியன்-2 கடைசி படமாக இருக்கும் என்றும் இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com