ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பா? - அபர்ணா பாலமுரளி

ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பா? என கேள்விக்கு நடிகை அபர்ணா பாலமுரளி பதில் அளித்துள்ளார்.
ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பா? - அபர்ணா பாலமுரளி
Published on

தமிழில் சூர்யா ஜோடியாக சூரரை போற்று படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா பாலமுரளி, 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். அபர்னா பாலமுரளி உடல் பருமனாக இருப்பதாக உருவக்கேலிகளை சந்தித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ''உடல் தோற்றத்துக்கும், திறமைக்கும் சம்மந்தம் இல்லை. நான் உடல் பருமனாக இருக்கிறேன் என்று சொல்வதை கேட்டு வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் இப்போது அப்படி பேசுவதை கண்டு கொள்வது இல்லை. ஆரோக்கிய பிரச்சினை மற்றும் வேறு காரணங்களால் உடல் எடையில் மாற்றங்கள் வரலாம். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே பலர் என்னை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்குக்கு முன்னால் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை. அவர்கள் தோற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். பிரபலத்துக்கும், தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை. திறமைதான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் தான் கதாநாயகி வாய்ப்பு வரும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com