'ஜன நாயகன்' தெலுங்கு படத்தின் ரீமேக்கா?.. வெளியான புதிய தகவல்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
'ஜன நாயகன்' தெலுங்கு படத்தின் ரீமேக்கா?.. வெளியான புதிய தகவல்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜேடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியேல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் 'தளபதி வெற்றி கொண்டான்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஜன நாயகன் படம் தெலுங்கு படமான 'பகவந்த கேசரி' படத்தின் ரீமேக் என்று சமூக வலைத்தளங்களில் பேச்சுவார்த்தை உலா வருகிறது. அதேசமயம் பகவந்த கேசரி படத்தின் ரீமேக் உரிமைய ஜனநாயகன் படக்குழு அதிகாரபூர்வமாக பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய தகவல் என்னவென்றால், பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சியை (Good Touch & Bad Touch) ஜனநாயகன் படத்தில் பயன்படுத்த உள்ளனர். ரிலீஸுக்கு பிறகு எந்த சட்ட சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com