ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்? புதிய படம் குறித்து வெளியான தகவல்

ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாகும் ஜேசன் சஞ்சய்? புதிய படம் குறித்து வெளியான தகவல்
Published on: 

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் கதாநாயகனாகப் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரவேற்பைப் பெற்ற ‘சிக்மா’

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சிக்மா’. வணிக ரீதியிலான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டபோது, அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் திரையில் தோன்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர்.

கதாநாயகனாக நடிக்கிறாரா?

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவும், ‘தாக்க தாக்க’ படத்தின் இயக்குநருமான சஞ்சீவ் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகப் பரவும் இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com