கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'

கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் பும்ரா- நடிகை அனுபமா திருமணம் ; அனுபமாவின் தாயார் மறுப்பு 'வதந்திகளை வேடிக்கை பார்க்கிறோம்'
Published on

திருவனந்தபுரம்

சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள 20 ஓவர் தொடரில் அவர் இடம்பெறவில்லை. பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அனுபமாவின் தாயார் சுனிதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பும்ராவும்,அனுபமாவும் இன்ஸ்டகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதைப் பிடிக்காதவர்கள் தான் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். அனுபமாவை எல்லோரும் மறந்திருக்கும்போது புதிய கதை வெளியாகும். இதை நேர்மறையாகவே பார்க்கிறோம்.

இதற்கு முன்பும் அனுபமாவை பும்ராவுடன் சேர்த்து எழுதினார்கள். இதன்பிறகு இருவரும் ஒருவரையொருர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா படப்பிடிப்பில் இருந்தார். அதில் பும்ராவும் வந்து தங்கினார். அப்போது தான் இருவரும் முதல்முறையாகச் சந்தித்தார்கள்.

இப்போது இருவரையும் பற்றி ஏன் செய்திகள் வெளிவருகின்றன என எனக்குப் புரியவில்லை. தற்போது படப்பிடிப்புக்காகத்தான் ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றுள்ளார். மக்கள் எவ்விதமான வதந்தி பரப்பினாலும் அதில் உண்மையில்லை. வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com