நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் 'சைரன்'..? ரசிகர்கள் ஏமாற்றம்

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ஜெயம் ரவியின் 'சைரன்'..? ரசிகர்கள் ஏமாற்றம்
Published on

சென்னை,

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 26ம் தேதி 'ZEE5' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com