'மாவீரன்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - மடோன் அஸ்வின் புதிய அப்டேட்

இயக்குனர் மடோன் அஸ்வின் 'மாவீரன்-2' படத்திற்கான கதையை எழுத தொடங்கியுள்ளார்.
'மாவீரன்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - மடோன் அஸ்வின் புதிய அப்டேட்
Published on

'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்தவர், மடோன் அஸ்வின். அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'மாவீரன்' என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதில், அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சுனில், சரிதா ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் குரல் 'அசரீரி'யாக ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, மடோன் அஸ்வின் விக்ரம் நடிப்பில் புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், மடோன் அஸ்வின் தற்போது 'மாவீரன்-2' படத்தின் கதையை எழுதத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com